நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டும் பிரிந்துவிட்டோம்!-இசையமைப்பாளர் டி.இமான்.

திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான், தனது மனைவியை சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,, “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட்டும் சட்டபூர்வமாக பரஸ்பரம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு எங்களின் திருமண உறவை முடித்து கொண்டு விட்டோம்.

 நாங்கள் இருவரும் இனி கணவன் மனைவி அல்ல. எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார். டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.