அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம்!-இயக்குனர் வினோத்.

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்.

இவர்களுடன்  யோகிபாபு, புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் குறித்து இயக்குனர் எச்.வினோத் கூறியதாவது,”வலிமை வெறும் பைக் ரேஸ் பற்றிய படம் மட்டும் இல்லை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.

அஜித் சாருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகம். நமக்கு ஒரு சிறிய அடிபட்டால் கூட நாலு பேருக்கு காட்டுவோம். ஆனால், அஜித் சார் அப்படி கிடையாது. அவருக்கு வலியைத் தாங்கும் சக்தி அதிகமாகவே உள்ளது. விபத்து ஏற்பட்ட அந்தப் பைக் காட்சிகளை நாங்கள் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து படமாக்கினோம்.

அப்போது தயாரிப்பாளர் போனிகபூரும் இருந்தார். எதிர்பாராவிதமாக பைக்கிலிருந்து விழுந்து அஜித் சாருக்கு அடிப்பட்டதும் நாளைக்கு ஷூட்டிங் வேண்டாம். ரெண்டு மூன்று நாள் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் தயாரிப்பாளர்.ஆனால், அஜித் வேண்டாம் என்று கூறிவிட்டு, அந்தக் காயத்துடனேயே மறுநாள் இரவு படப்பிடிப்புக்கு  வந்து விட்டார்,

பைக் சேஸிங் சீன் என்பதால் மூன்று லேயர் உடைகளை அணியவேண்டும். அடிப்பட்டு சதையெல்லாம் பிய்ந்துபோன புண்ணுக்கு நடுவில் அணிவது எவ்வளவு ரிஸ்க்? ஆனால், வலியை பொருப்படுத்தாமல் அந்த உடையை போட்டுக்கொண்டு வந்து நின்றதை பார்க்கும்போது அச்சரியமாக இருந்தது என்கிறார்.