கையில் சரக்குடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமலாபால்!

சமூக வலைதளங்கள் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகை அமலாபால்,தனது  தாராள   கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு கடும் விமர்சனத்திற்கும்  ஆளாகி வருகிறார்.

தற்போது அமலாபால், மலையாளத்தில் ஆடுஜீவிதம், தமிழில்  அதோ அந்த பறவை போல ,கடாவர் ஆகியபடங்களிலும், வெப் தொடர் களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை அமலாபாலுக்கு கடந்த வாரம்  துபாய் அரசு கோல்டன் விசா வழங்கியது. இதையடுத்து  தற்போது அமலாபால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக  துபாய் சென்று உள்ளார்  

இந்நிலையில் துபாயில் பார் ஒன்றில் கையில் சரக்கு கிளாசுடன், செம போதையில் இருப்பது போன்ற புகைப்படங்களை  தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த  அமலாபாலின் ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரை இதுக்குதான் கோல்டன் விசாவா? போதை ஏறி  புத்தி மாறிப் போச்சுன்னா இப்படித்தான்.   புத்தாண்டு இப்பவே களை கட்டி விட்டதா என  ஏகத்துக்கும் திட்டியும் கருத்துக்களைபதிவிட்டு வருகிறார்கள்.