மாநாடு படத்தை தொடர்ந்து சிலம்பரசன் டி ஆர்.கவுதம் மேனன் இயக்கத்தில்,
உருவாகி வரும் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்து வருகிறார்.
முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து முடிந்தது.
தற்போது படக்குழு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது, படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து 3ம் கட்டப்படப்பிடிப்பு ஜனவரி 3ந் தேதி முதல் தொடங்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகி வந்த நிலையில்,தற்போது ஜம்ப லகடி பம்பா, பிரேம கதா சித்திரம் 2, மற்றும் அனுகுன்னடி ஒகடி அயினடி ஒகடி போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ள மும்பையைச் சேர்ந்த நடிகை சித்தி இதானி தான் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் டீசர் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் குரலில், அவர் இசையமைப்பில் வெளியான “மறக்குமா நெஞ்சம்” பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.