நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கேஜிஎப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 23 முதல் தொடங்கி நடந்து வந்த நிலையில்,திடிரென நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து படக்குழு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.