தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சூரி தற்போது கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடித்து வருகிறார்.
அதே சமயம் இனிமேல் கதாநாயகனாக மட்டுகே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் ‘டான், விருமன், எதற்கும் துணிந்தவன், உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக அமீர் இயக்கத்தில் உருவாகும் புதிய படமொன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.