தமிழில் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் தனது நீண்ட நாள் காதலரான ஜோமோனை கடந்த ஜனவரி 9ம் தேதி பெங்களூருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
கடந்தவருடம் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர் திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்காத நிலையில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் ரெபா மோனிகா, ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே விஜய்யின் பிகில் படத்திலும் நடித்துள்ளார்.