புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடிகை சமந்தா,ரூ. 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,தற்போது இந்த பாடலில் 3 நிமிடம் நடனம் ஆட சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
முதலில் இந்த பாடலில் நடனம் ஆட சமந்தா மறுத்ததாகவும், ஆனால் அல்லு அர்ஜுன் வற்புறுத்தலின் பேரில் சமந்தா நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பளத்தை வைத்துப் பார்க்கும் போது தென் இந்திய நடிகைகளில் சமந்தா தான் அதிக சம்பளம் பெறுகிறார் என திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
சமந்தா நடிப்பில் உருவான முதல் ஐட்டம் பாடல் “ஓ சொல்றியா மாமா” என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில்
இப்பாடல் குறித்து சமந்தா கூறுகையில், “நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாக, சீரியசாக இருந்திருக்கிறேன், தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்வதை சிறப்பாகச் செய்ய கடினமாக உழைப்பேன். ஆனால், ‘செக்சி’ ஆக நடிப்பதென்பது அடுத்த கட்ட கடின உழைப்பு. உங்கள் அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா 2 ம் பாகத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்காகவும் தற்போது சமந்தாவிடம் அல்லு அர்ஜுன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.