ரஜினி,கமல்,விஜய் படங்களை தயாரிக்கும் இளையராஜா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிங்காரவேலன் உள்ளிட்ட பல படங்களை தனது பாவலர் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இசைஞானி இளையராஜா தயாரித்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது பாவலர் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் பேனரில் உச்சநட்சத்திரங்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகும் மூன்று திரைப்படங்களை தயாரிக்க இசைஞானி திட்டமிட்டுள்ளதாவும் இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், இதையடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.