கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்!
மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று காலை ‘திடீர்’ என போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கமல் அலுவலகத்தில் விசாரித்த போது, வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் சென்றுள்ளதாகவும் நேற்று மாலையே வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில்,முழு உடற்பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை 11.30 மணியளவில் வீடு திரும்பினார்.
இதையடுத்து வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தான் நடித்து வரும் விக்ரம் படப்பிடிப்பிற்கு செல்ல உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது..