‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ்!
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ்,.ராமர், சூரி, புகழ் .உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை ரத்னவேலுகவனிக்க, இமான் இசையமைத்துள்ளார்
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் சும்மா சுர்ருன்னு எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும்,இப்படம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.