பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து, திருமணமும் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வம் காட்டிவரும் பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 65 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளனர். இதுகுறித்த பதிவில், இந்த சிறப்பான தருணத்தை குடும்பத்துடன் செலவு செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்