கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் தனக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தன் செல்லமகள் லீலாவின் பிறந்தநாள் விலாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதை நினைத்து வருத்தப்படுவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இயக்குனர் செல்வராகவன் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
இது குறித்து செல்வராகவன் கூறியுள்ளதாவது,”எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று காலை மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
கடந்த 2, 3 நாட்களில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவர்களிடம் கன்சல்ட் செய்து கொள்ளுங்கள். மாஸ்க் அணிந்து , பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்
🙏🏼🙏🏼 pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022