
நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிற படம் மகா .
நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும், அவரது 50 வது திரைப்படம்தான் “மகா” படம்.
ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
யு .ஆர்.. ஜமீல் இயக்கும் இப்படத்தை, எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி மதியழகன், தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார். தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), ஜே . லக்ஷ்மன் (ஒளிப்பதிவு), ஜெ.ஆர். ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மணி மொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.












