ஊரடங்கு ரத்து: ‘வீரமே வாகை சூடும்’படவெளியீட்டை அறிவித்த விஷால்!
வரும் பிப்ரவரி 1 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் கோடம்பாக்கத்தை பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தள்ளி வைக்கப்பட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீட்டு தேதியை உறுதி செய்யும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது.
முதலில் எந்த பெரிய நடிகரின் படத்தை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி கிடக்க, முதல் ஆளாக, விஷாலின் பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் தங்களது வீரமே வாகை சூடும் படத்தை வரும் பிப்ரவரி 4 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ளார் இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க,. இவர்களுடன் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ், குமாரவேல், துளசி, ரவீனா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.