‘அஜித் 61’ படத்தலைப்பு இதுவா?
அஜித் நடிப்பில் வெளியான ’வலிமை’ படத்தை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி ’அஜித் 61’ படத்திற்காக இணைந்துள்ளது.
’அஜித் 61’ படத்தின் பூஜை வரும் மார்ச் 9ஆம் தேதிஅன்றும்,மார்ச் 18-ம் தேதி படப்பிடிப்பும் தொடங்கும் என்றும், இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்டமாக சென்னை அண்ணா சாலை செட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,தற்போது இப்படத்தின் தலைப்பு குறித்தும் அதிரடி தகவல் ஓன்று வெளியாகியுள்ளது.
அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படும் இப்படத்திற்கு வல்லமை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் பூஜையன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது