ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனருடன் இணைந்த நடிகை சமந்தா!
நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் பாத்திரத்தில் நடிக்கும் புதிய படம், “யசோதா” இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்பட பலர் நடித்துள்ளனர்., இப்படத்தை ஹரி – ஹரீஷ் கூட்டணி இயக்குகிறது.
ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் யானிக் பென் இப்படத்துக்கு சண்டைகாட்சிகளை அமைத்துள்ளார்.இதுகுறித்துஇப்படத்தின் இதுகுறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில்.., யானிக் பென் இயக்கத்தில் சமந்தா உள்ளிட்டோர் நடித்த முக்கிய ஆக்ஷன் காட்சிகளை 10 நாட்கள் படமாக்கியுள்ளோம்.
3 விதமான செட்களில் படமாக்கிய அந்த சண்டைக்காட்சிகளில் சமந்தா அசாத்தியமான ஆக்ஷன் காட்சிகளை நடிக்க கடுமையாக உழைத்துள்ளார். தற்போது கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்திய திரைப்படங்களில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தில் ஆக்ஷன் எபிசோடுகள் மிக அபாரமாக இருக்கும்.
படத்தின் கதை மட்டுமின்றி இந்த ஆக்சன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும். தற்போதைக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 கோடி செலவில் கலை இயக்குனர் அசோக் அந்த செட்டை வடிவமைத்துள்ளார். மே 1ஆம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை எம் சுகுமார் கவனிக்க,மணிசர்மா,இசையமைத்து வருகிறார். புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலக்ஷ்மி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்