நடிகை குட்டி பத்மினி பாஜகவில் இருந்து ‘திடீர்’ விலகல்!
தமிழக பா.ஜ.கவில் நடிகை .குட்டி பத்மினி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக
கடந்த 11 ஆண்டுகளாக இருந்து வந்த நடிகை குட்டி பத்மினி இன்று திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை குட்டி பத்மினி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது,“ நான் பெரும்பாலும் வேலை காரணமாக மும்பையில் இருப்பதால் கட்சி மற்றும் அரசியலில் ஈடுபட முடியவில்லை. மேலும் அரசியல் எனக்கான களம் அல்ல என்பதை தற்போது புரிந்து கொண்டேன்.அதே சமயம் எப்போதும் நான் பாஜகவுக்கு ஒரு நலன் விரும்பியாகவே இருப்பேன் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.