நடிகர் கமல்ஹாசன் கால் எலும்பு முறிந்தது!மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார்!!
அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்த கமல்ஹாசன்,கடந்த வாரம் சென்னை திரும்பினார். இந்நிலையில் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் வேளையில் மூழ்கியிருந்த அவர் நேற்று நள்ளிரவு ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடிப்படியில் இறங்கிய போது திடீரென தடுமாறி தவறி விழுந்தார் இதில் அவருக்கு வலது கால் மூட்டு மற்றும் காலில் தசை கிழிந்து தொங்கியது.வலியால் துடித்த அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் . அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்ட கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. .இது தொடர்பாக அவரது சகோதரர் சந்திரஹாசன் கூறுகையில், கமல்ஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அவர் இயல்பு நிலைக்கு திரும்ப 4 முதல் 6 வாரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினார்..