உயிருக்கு உயிராக அந்த கிராமத்தில் பழகி வந்த அந்த உயிர் நண்பர்களை எது பிரித்தது?
அரசியல்.!பதவி பெறுவதற்காக இருவரும் மோதுகிற அளவுக்கு அரசியல் அவர்களை பிரித்து விளையாடியது.
இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் படம் தான் சி.சி.வி.குரூப்ஸ் சார்பில், பொன் கோ. சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன் கோ விஜயன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படமான ” பூதமங்கலம் போஸ்ட்”
.சென்னை, தண்டலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் வளர்ந்துள்ளஇப்படத்தில்,, விஜய் கோவிந்தசாமி, ராஜன் மலைச்சாமி, அஸ்மிதா, மோனிகா ரெட்டி, ராட்சசன் பசுபதி, மாஸ்டர் தக்சித் தேவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க, , அர்ஜுன்—-கே.ஆர்.கவின் இருவரும் இணைந்து இணைந்து இசையமைத்துள்ளனர் இப்படத்தின் கதை , திரைக்கதை, வசனம் எழுதி நடித்து, தனது மூன்றாவது படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் ராஜன் மலைச்சாமி.