கேமரா எர்ரர் என்ன சொல்லுது? மர்ம மரணம் பற்றிய அச்சம் !
விஸ்டார் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் துபாய் மிஸ்ரா தயாரித்துள்ள திகில் படம் ” கேமரா எரர் “.

இதில்,சுதிர், ஹரிணி, அகரன், பிரபாகரன்,சமீர், புதுமுகம் சிம்ரன், உள்பட பலர் நடித்துள்ளனர் ,இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி , இரு நாயகன்களில் ஒருவராகவும் நடித்து வருகிறார் இயக்குனர் அகரன்.
இவர் கூறியதாவது,”பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து திரைப்படம் தயாரிக்க படப்பிடிப்பு குழுவினர் மேட்டூர் அருகே உள்ள அந்த ஊருக்கு செல்கின்றனர்.
Related Posts
சென்ற இடத்தில் ஒவ்வொரு நாளும் படக்குழுவை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் கொலையாகிறார்கள் .அதன்பின் நடக்கும் திகிலான சம்பவங்களால் படக் குழுவினர் அனைவரும் பீதி அடைகின்றனர். இதையடுத்து படக் குழுவினர்அகன்றான் , படப்பிடிப்பு நடத்தினார்களா? இல்லையா? பீதியில் உறைந்த படக்குழுவினர் கதி என்னவானது என்பதை ” கேமரா எரர் ” படம் விளக்கும்.
” இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் அனைவருக்கும் படத்தின் காட்சிபற்றி விளக்கமாக சொன்ன உடன் அவர்கள் அந்தக் காட்சிக்கான வசனத்தை அவர்களே யோசித்து. சொந்தமாக பேச வைத்து நடிக்க வைத்துள்ளோம்..தமிழ் திரை உலக வரலாற்றில் வசனகர்த்தா இல்லாமல் ஒரு படத்திற்கு நடிகர்/ நடிகைகளே யூகித்து வசனம் பேசி நடித்துள்ள முதல் தமிழ் படம் தான் ” கேமரா எரர்”என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை எஸ்.பி. பாலாஜி கவனிக்க,ஷரவணன் கலை இசையமைத்துள்ளார்.