டி.வி.எஸ். பிலிம்ஸ் சார்பில் பி-பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ளபுதிய படத்துக்கு ” ஜம்பு மகரிஷி ” என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோருடன் , ” மஸ்காரா ” புகழ் அஸ்மிதா நாயகியாகவும், புதியவரான பி.பாலாஜி நாயகனாக நடித்தும் இப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியும் உள்ளார் .
இப்படம் குறித்து இயக்குநரும் நாயகனுமான பி.பாலாஜி கூறியதாவது,
“விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கிற இந்தியாவின் விவசாயத்தை அழிப்பதற்காக ஒரு வெளிநாடு தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுக்கப்பார்க்கிறது.
இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ள படம் தான் ” ஜம்பு மகரிஷி ” .
திருச்சி அருகே திருவானை காவலில் வாழ்ந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்
அரக்கன் வாதாபியாக பாகுபலி பிரபாகரும் அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனாக பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக்காட்சியும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.என்கிறார்.
பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க,தேவா இசையமைத்துளார்.தணிக்கை அதிகாரிகளால் ” யு “சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை காசியில் உள்ள வாரணாசி, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னைஆகிய இடங்களில் நடத்தி உள்ளனர்.