
கோவில்களை தேடி தேடிப்போய் தெற்கு வடக்காக நின்று கும்பிடு போட்டுவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் விக்னேஷ் சிவனும் ,நயன்தாராவும்.!
கல்யாணம் கூட அவர்களுக்கு வியாபாரம்தான்.! நெட் பிலிக்சில் திருமண நிகழ்ச்சி வரவேண்டும் என்பதற்காக தாலி கட்டுவதை கூட படம் எடுக்க விடாமல் ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. நெட்பிளிக்சில் சுளையாக 25 கோடி வியாபாரம் பேசப்பட்டது.
கல்யாணத்தை கவுதம் மேனனின் டீம் தான் படம் பிடித்தது.
இதற்கிடையில் தங்களின் அனுமதி இல்லாமல் கல்யாண படங்களை பத்திரிகைகளுக்கு கொடுத்ததில் நெட்பிளிக்ஸ்க்கு அதிருப்தி. டீலில் இருந்து விலகப்போவதாக செய்தி ஒழுகல்.இது உண்மையா என்பது தெரியாது.
ஆனால் அது உண்மையாக இருக்குமேயானால் கல்யாண திருக்கோலத்தை ரசிகர்கள் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று தம்பதிகள் மல்லாக்கப்படுத்துக்கொண்டுதான் அழ வேண்டியதிருக்கும்.












