தாய்லாந்தில் இருந்து இந்தியா திரும்பும் அஜித் படக்குழு!
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து, அஜித்- எச்.வினோத்- போனிகபூர் ஆகியோரின் கூட்டணி மூன்றாவது முறையாக துணிவு படத்துக்காக இணைந்துள்ளது.இப் படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி தொடர்ந்து 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையில் தொடங்கி காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்து வருகிறது.இந்த படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘சார்பட்டா பரம்பரை’ ஜான் கொக்கென் , வீரா ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்க, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் நடந்து வரும் துணிவு படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றும், மொத்த படக்குழுவினரும் அடுத்த வாரம் இந்தியாவுக்கு திரும்புவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.