நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோரது தயாரிப்பில், பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. கிராமத்து பின்னணியில் சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில். நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர்..ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், ட்ரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறது படத்தரப்பு . தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.