“நடிகர் சங்கக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அந்த கட்டிடத்தில் தன்னுடைய திருமணம் நடக்கும்” என்பதாக விஷால் சொல்லியிருந்தார்..
ஆனால் கட்டிட வேலைகள் இன்னும் முழுமை பெறவில்லை.விஷாலின் கல்யாணமும் நடக்கவில்லை.
ஆனால் காதல் செய்திகளுக்கு மட்டும் குறைவில்லை.!
பிரபல நடிகரின் மகளை காதலிப்பதாக செய்தி வந்தது .பின்னர் அது முடிவடைந்து விட்டதாக சொல்லிவிட்டனர்.
2019 ஆம் ஆண்டில், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதுவும் இல்லை என்றாகிவிட்டது. அனிஷா வேறு ஒருவரின் மனைவியாகிவிட்டாராம்.!
தற்போது விஷால் மீண்டும் காதலில் !
என்பதாக சொல்லுகிறார்கள்.!
வாய் பேச இயலாத ஒரு நடிகை.நாடோடிகள் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார். அபிநயா என்கிற அப்பாவி பெண் விஷாலை காதலிக்கிறாரா என்பது தெரியவில்லை.
ஆனால் இருவரும் காதலிக்கிறார்கள் .விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள் .அறிவிப்பு நிஜமாகும் வரை காத்திருக்கலாம்.