லக்கி மேன் என்பது 1கடந்த 995 ஆம் ஆண்டு கார்த்திக் கவுண்டமணி ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நகைச்சுவைத் திரைப்படம் லக்கி மேன் தற்போது இதே பெயரில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் யோகிபாபுவுடன் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. . அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள். சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம்.ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இங்குள்ள குறைவாக பேசப்படும் மக்களை பற்றியும் படம் பேசுகிறது. இதுவே படத்தின் அடிப்படை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.என்கிறார் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.இப்படத்தின் ஒளிப்பதிவை சந்தீப் கே விஜய் கவனிக்க, சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.