பிரபாஸ், கிருத்தி சனோன் திருமணம் ?
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் 42 வயதாகியும் இன்னும் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார்.
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோரின் ‘ஜோடி பொருத்தம்’ பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் பாகுபலி படப்பிடிப்பின் போது இருவருக்குமிடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டு ,இருவரும் காதலித்ததாகவும் தகவல் பரவியது.
ஆதிபுருஷ் டீசர் வெளியீட்டு விழாவில் வியர்வை சிந்திய பிரபாஸுக்கு, கிருத்தி தனது துப்பட்டாவை கொடுத்த வீடியோவும் வைரலானது.தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இப்படத்தில் ராமராகவும், சீதா வாகவும் நடித்துள்ள பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோனும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருவதாகவும்,இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல் பரவி வரும் நிலையில்,
பிரபல வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்து தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் செய்ய உள்ளனர், இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று அவர் ட்வீட் செய்துள்ளார். வைரலாக பரவி வரும் இந்த டுவிட் குறித்து நெட்டிசன்கள் பலரும், ‘சும்மா கொளுத்தி போடாதீங்க தலைவா’ என உமர் சந்துவை ட்ரோல் செய்து வருகின்றனர்.