இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்துக்கு ‘தண்டகாரண்யம்’ என பெயரிட்டுள்ளார்.
இப்படத்தை அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.இவர் ஏற்கனவே ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’.படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படத்தொகுப்பை செல்வா ஆர்.கே. மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது துப்பாக்கிக்கு பின்புறமாக காவல் துறையினர் சிலர் நடந்து வருவது போல இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.