கடந்த 2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானவர் பாலிவுட் திரையுலகில் ட்ராமா குயின் என்று அழைக்கப்படும் ராக்கி சாவந்த் சர்ச்சை நாயகியும் கூட..,இவர் தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ கம்பீரம் உள்ளிட்ட படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதே வேகத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணமும் முறிந்து போனது. இதையடுத்து கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதல் வெடித்தது. அதில் துரானி திருமணத்திற்கு பின்பும் வேறொரு பெண்ணும் தொடர்பு வைத்துள்ளதாகவும்,அவருடன் தொடர்பால், தன்னை உடல் மற்றும் மனரீதியாக தொந்தரவு செய்வதுடன், பணம் நகை ஆகியவற்றையும் அபகரித்து விட்டதாகவும் தன்னுடைய முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்றுவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து புகாரை விசாரித்த போலீசார் அதில் துரானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராக்கி சவாந்த்
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,”அதில் துரானி என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து , அதை நிறைய பேருக்கு விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைமில் உள்ளது. எனக்கு வரும் ஓடிபிக்களை எடுத்து என் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.