வைரலாக பரவும் சூர்யாவின் ‘ஜிம்’ வீடியோ!
ஜெய்பீம் ,விக்ரம் படங்களைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில்,நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத (சூர்யா 42) படத்தில் நடித்து வருகிறார்.
இதில்,சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படம்,3டி முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் உருவாகி வருகிறது.
.இந்நிலையில், இந்தப் படத்திற்காக சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், ‘சூர்யா 42’ படத்திற்காக டெடிக்கேட்டடாக ‘ஜிம்’மில் ‘ஒர்க் அவுட்’ செய்து வருவதாக கேப்ஷன் பதிவிட்டுள்ளது. சூர்யா ரசிகர்களால் இவ் வீடியோ வைரலாகி வருகிறது.
The Man of Hardwork and Dedication ❤️❤️❤️❤️ @Suriya_offl Anna ❤️❤️❤️#Suriya42 🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/p6ZtEv1A6N
— Studio Green (@StudioGreen2) February 11, 2023