பழனி முருகன் கோவிலில் சமந்தா ! 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினார்!!
‘மயோசிட்டிஸ்’ நோய் தாக்கத்தில் இருந்து மெல்ல, மெல்ல விடுபட்டு வரும் நடிகை சமந்தா தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள “சகுந்தலம்” திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது..இப்படத்தை தொடர்ந்து சமந்தா தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு தன் உடல் நலம் குணமாக. 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார்..
அவருக்கு பழனி முருகன் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சமந்தா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு தற்போது கடவுளின் அருளால், மருத்துவர்கள் ஆலோசனையில் உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்ததாக கூறினார்.