துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது
ஆனால் அஜித்தின் அடுத்தப்படத்தின் அதிகாரபூர்வ இயக்குனர் யார் என்பது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் சென்னை திரும்பிய பிறகே லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.
சமீபத்தில்,லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் குமாரின் புகைப்படங்களை அவரது மனைவி,நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில்,போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித், ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் மற்றும் அங்குள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு தானே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.