வருமான வரித்துறை அதிரடி! நடிகர் மோகன்லாலிடம் பல மணி நேரம் விசாரணை!!
கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி, மலையாள திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்..
அப்போது நடிகர் மோகன்லாலின் முன்னாள் கார்டிரைவரும்,தற்போதைய பிரபல படத் தயாரிப்பாளருமான ஆண்டனி பெரும்பாவூர் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,தற்போது மோகன்லாலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆண்டனியும் மோகன்லாலும் இணைந்து படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில்,. ஆண்டனியிடம் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து, நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
கொச்சியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாரிகள் மோகன்லாலிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
கடந்த 2012ம் ஆண்டு ஏற்கனவே , மோகன்லால் வீட்டில் நடந்த ஐடி ரெய்டின் போது, 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், இந்த வழக்கில் மோகன்லால் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள், இறந்த யானையின் உடையது தான் கேரள அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறை நடத்திய சோதனை குறித்து மோகன்லால் தரப்பில் இருந்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை