தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
27.3.2023 காலை 11.00 மணி முதல் 29.03.2023 மாலை 5.00 மணிவரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.( ரூபாய் 100 செலுத்தி சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
30.03.2023 காலை 11.00 மணி முதல் 03.04.2023 மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் மூடி முத்திரையிட்ட பெட்டியில் 03 -04.2023 மாலை 5.00 மணிக்கு சீல் வைக்கப்படும்.
05.04.2023 காலை 10.00 மணி முதல் 06.04.2023 மாலை 04.00 மணிவரை வேட்புமனுவிண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மாலை 04.00 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்பப்பெற இயலாது.
07.04 – 2023 அன்று மாலை 06.00 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும்.
01.05.2023 அன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு-;
1. தலைவர் 1
2. துணைத்தலைவர்கள் 2
3. செயலாளர்கள் 2
4, பொருளாளர் 1
5. இணைச்செயலாளர் 1
6. செயற்குழு உறுப்பினர்கள் 26
1. தலைவர் பதவிக்கு ரூபாய் 1,00000
2. மற்ற நிர்வாகிகள் பதவிக்கு ரூபாய் 50000
3. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரூபாய் 10000
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.