Monday, July 13, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Uncategorized

இயக்குநரை ஏமாற்றி தியேட்டரை ஆட்டை போட்ட கும்பல்.!

admin by admin
March 20, 2023
in Uncategorized
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter


பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல் படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.  அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படகுழுவினர் பேசியவை களின் தொகுப்பு.

இயக்குநர் பிராஷ் பேசும்போது,

You might also like

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணி  பார்க்கையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன். இருப்பினும், கடலோர காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன்.

அதன் பின் ஒரு விபத்தில் சிக்கினேன். நான் அந்த விபத்திலிருந்து மீண்டு வந்ததற்கு காரணமே அப்துல் கலாம் ஐயா-வின் “விங்ஸ் ஆப் பயர்” புத்தகம் தான். அந்த புத்தகத்தை படித்துவிட்டு, நான் அப்துல் கலாம் ஐயாவை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு கடிதம் எழுதி அவரை சந்தித்தேன். அதன் பின், அவரின் வாழ்க்கையை ஒரு சுய சரிதை படமாக்க எனக்கு மட்டுமே அந்த உரிமையை கொடுத்தார். 2014ஆம் ஆண்டு அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டேன். அதன் பின் சில காரணங்களால் அப்படம் இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை. அப்படத்தில் விக்ரம் சாராபாயாக “சீயான்” விக்ரம் சார் தான் நடிக்கிறார். இன்னமும் அந்த படம் உயிருடன் தான் இருக்கிறது.

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம். கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம்.

17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது.

இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார். நிச்சயமாக படம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.

நடிகை நேஹா சக்ஸேனா பேசும்போது

நான் பஞ்சாபி பெண். ஆனால், தமிழ் படிக்க வேண்டும் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் அப்பா என்னுடைய சிறு வயதில் ஒரு விபத்தில் இறந்து விட்டார். என் அம்மா தான் என்னை வளர்த்தார். வாழ்க்கையில் முன்னேற எதாவது ஒரு லட்சியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா கூறினார். பல மொழிகளில் 12 வருடங்களாக நடித்து வருகிறேன். சினிமாவிற்கு மொழிகள் கிடையாது. ஒரு மாநிலத்திற்குள் நாம் வேலைக்காக அல்லது நம் தேவைக்காக செல்லும்போது அந்த மாநிலத்தின் மொழியை நாம் கற்றுக்கொள்வது அந்த மாநிலத்திற்குச் செய்யும் மரியாதை. நான் பஞ்சாபி பெண்… ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சினிமாக்களில் வேலை செய்யும் போது அந்தந்த மொழியைக் கற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் என்று பேசி கைத்தட்டல்களை வாங்கினார்.

நடிகர் டினி டாம் ,பாடலாசிரியர், வசனகனர்த்தா முருகன் மந்திரம் ,இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ் ஆகியோரும் பேசினார்கள் 

போதை பொருள் கும்பலிடம் இருந்து இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்படத்தின் கதை. 

Tags: அபிநயாஆபரேஷன் அரபைமாடினி டாம்நேகா சக்சேனாபாலாஜிபி.நடராஜன்பிராஷ்பிராஸ் ரகுமான்
admin

admin

Related Posts

முதல்வர் விஜய் பிறந்த நாளில்  ரீ ரிலீசாகும் மெர்சல்!
News

முதல்வர் விஜய் பிறந்த நாளில் ரீ ரிலீசாகும் மெர்சல்!

by admin
June 13, 2026
News

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

by admin
August 20, 2025
Uncategorized

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

by admin
August 19, 2025
நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!
Uncategorized

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

by admin
May 14, 2025
ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

by admin
November 24, 2024

Recent News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

July 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?