சென்னையில் நடந்தவிழா ஒன்றில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், “பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பொய் சொல்ல வெட்கப்படுங்கள். ஒரு படம் தோல்வியடைந்தால் அதை சத்தமாகச் சொல்லுங்கள், அப்போதுதான் ஹீரோக்களுக்கு கொஞ்சம் புத்தி வரும். பாக்ஸ் ஆபிஸ் பற்றி பொய் சொல்லாதீர்கள்
என்றும் நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உண்மை ஒத்துவராது என்றும் பேசியுள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சிஐஐ விழாவில்
சென்னையில் நடந்த CII Dakshin South India Media and Entertainment Summit 2023 விழாவில் கலந்து கொண்ட திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகையில்,
>“பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பொய் சொல்ல வெட்கப்படுங்கள். ஒரு படம் தோல்வியடைந்தால் அதை சத்தமாகச் சொல்லுங்கள், அப்போதுதான் ஹீரோக்களுக்கு கொஞ்சம் புத்தி வரும். பாக்ஸ் ஆபிஸ் பற்றி பொய் சொல்லாதீர்கள். பாக்ஸ் ஆபிஸ் வசூலை மீடியாக்களுக்கு பகிர்வதை நிறுத்திவிட்டேன், ஏனென்றால் நான் பொய் சொல்வதில் வெட்கப்படுகிறேன். உண்மையான புள்ளிவிவரங்களைச் சொல்ல வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை கோபப்படுத்துவது போல் ஆகிவிடும். எனவே, நான் அனைத்தையும் ஒன்றாக நிறுத்திவிட்டேன். தயாரிப்பாளர்கள் பொய் சொல்வதை நிறுத்தினால், தமிழ் சினிமா நன்றாக இருக்கும்
“>திரைப்பட விநியோகஸ்தர் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் பணத்தை தங்கள் திரைப்படங்களின் சக்சஸ் மீட்க்கு செலவிடுவதை விட சிறந்த திரைப்படங்களை தயாரிப்பதில் முதலீடு செய்ய வேண்டும். இது தயாரிப்பாளர்களுக்கு எனது வேண்டுகோள்: உங்கள் வேலை ரசிகர்களை திருப்திப்படுத்துவது, ஹீரோக்களை திருப்திப்படுத்துவது அல்ல. வெற்றிக் கூட்டங்கள் மற்றும் அது போன்ற விஷயங்களுக்காக பணத்தை செலவழிக்காதீர்கள். பணத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்.
“>ஒரு படம் வெளிவந்ததும் இரண்டாம் நாள் வெற்றி விழா, மூன்றாம் நாள் வெற்றி விழா கொண்டாடி தேவையில்லாத வெட்டி செலவு செய்கிறீர்கள். இதை முதலில் நிறுத்திவிட்டு, அந்த பணத்தை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துக்கள். ஹீரோவை பாராட்ட வேண்டும் என்பதற்காக வெற்றி விழா எடுத்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள்.என ஏகத்துக்கும் விளாசி தள்ளியுள்ளார் .இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போதைய தமிழ் சினிமா குறித்து
அண்ணன் திரு.திருப்பூர் சுப்ரமணியம் அவர்களின் சூப்பர் பேச்சு…👌👌👌 pic.twitter.com/Z8sgvTohb6— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) April 21, 2023












