‘ஆகஸ்ட் 11’-ம் தேதி திரைக்கு வரும் ‘மாவீரன்’!
சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிப்பில், அஷ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரிய சகோதார, சகோதரிகளே வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ‘மாவீரன்’ திரையில் உங்களைச் சந்திக்க வருகிறான்” என்று பதிவிட்டு, மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
. ‘மண்டேலா’ மடோன் அஷ்வின் எழுதி இயக்கியிருக்கும் இப்படம் ஒரு ஆக்ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராகும். இதில் அதிதி ஷங்கர், கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப் படம் தமிழ், தெலுங்கில் ‘பை லிங்குவல்’ படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பரத் சங்கர் இசையமைத்துள்ள இதற்கு வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.