முன்னாள் நடிகர் சங்கப் பொது ச் செயலாளருமான ராதா ரவியின் பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.. அவ்விழாவில்,நடிகரும் ,அ திமுக பிரமுகருமான ஜே.கே. ரித்தீஷ், விஷாலுக்கு எதிராக திடீர் ஊழல் குற்றசாட்டை கூறியுள்ள வாராகி , ஆ கியோர் கலந்து கொண்டனர்.. அப்போதுதான் விஷாலுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அ தாவது வருகிற ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஜே.கே. ரித்தீசை தலைவர் பதவிக்கு போட்டியிட வைப்பது என்றும் அதற்கு ராதாரவி உதவி செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் நடிகரும், நடிகர் சங்கத்தின் பொது செயலாளருமான விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இளைஞர்கள் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். விஷாலின் இந்த அதிரடி திட்டத்தை முறியடிக்க நடிகர் சங்கத்தின் மீது வாராகியை வைத்து புகார் கொடுக்கப்பட்டது என்கிறது விஷால் தரப்பு!