ஆர்யா – கவுதம் கார்த்திக் கூட்டணியில் ‘மிஸ்டர் எக்ஸ்’!

பிரின்ஸ் பிக்சர்ஸ் படநிறுவனம்சார்பில் எஸ்.லஷ்மன்குமார் தயாரித்து வரும் புதிய படத்திற்கு    ‘மிஸ்டர் எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.  

 ‘எஃப்ஐஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.  ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடத்தப்பட உள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  தற்போது  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இப்படத்துக்கு மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த  திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.இணை தயாரிப்பை ஏ.வெங்கடேஷ். ஏற்றுள்ளார்.இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.