‘தங்கலான்’ படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயம்!

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்து வரும் தங்க லான் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்காக விக்ரம் கடுமையான உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்றி வைத்துள்ளார் இப்படத்தில் நடித்துவரு ம் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது

இந்த நிலையில், நேற்று தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவரை அணுகிய நிலையில், ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் , ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இணைவார் என்று தெரிகிறது படப்பிடிப்பில் விக்ரம் காயம் அடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்