ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜீவா?

மறைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி “யாத்ரா” என்ற திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.இந்நிலையில் தற்போது ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் , ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம், யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகலாம் என்றும், இப் படத்துக்கு யாத்ரா 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின்ளமை காலம் முதல் ஆந்திர முதலமைச்சர் ஆனது வரை இதில் இடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது