நடிகை சமந்தா தற்போது ஐதராபாத்தில் கடற்கரையை ஒட்டி,13-வது தளத்தில் ரூ.7.8 கோடி மதிப்புள்ள புதிய வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில்,, இயக்குநர் அட்லீ,ரூ.38 கோடிக்கு மும்பை மாநகரில் சொகுசு அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இப்படத்தை முடித்த உடனே விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரின் படத்தை அட்லீ இயக்கப் போகிறார் என்கிறார்கள்.இதையடுத்து இயக்குனர் அட்லீயும் மும்பையில் செட்டிலாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது