இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன்-2 படப்பிடிப்பில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்.இந்தியன் 2 படத்தில் ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்படவுள்ளதாம்.
இதற்கிடையே கமல் தனது காட்சிகள் அனைத்துக்கும் முழுவதுமாக டப்பிங் பேசி முடித்துள்ளார் . கமலைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ படத்துக்கு முன்னதாகவே இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள தனது 234வது படத்தில் நடிக்கவுள்ளார்.ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா, அல்லது திரிஷா நடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் தான் கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,இப்படத்தில் கமலுடன் சிம்புவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் , ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது