அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் பிரசாந்த், சினேகா இருவரும் இணைந்து நடித்தபோது காதலிக்க தொடங்கினர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு,இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,பிரசன்னா – சினேகா தம்பதி தங்களது 11 வது திருமண நாளைசிறப்பாக கொண்டாடியுள்ளனர்
இது குறித்து நடிகர் பிரசன்னா, சினேகாவுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”ஏய் பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன். உன்னுடன் நான் மேற்கொண்ட இந்த பயணத்திற்கு நன்றி உடையவனாக இருப்பேன். நான் எவ்வளவோ கஷ்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்து இருக்கிறேன், அப்போதெல்லாம் நீ என் பக்கத்தில் இருந்ததால் எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.
உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீ தான் . உன்னை என் துணையாக பெற்றதற்கு நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய். உன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொலைதூர நாடுகளுக்கு, புரியாத பாதைகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத உன் அன்பில் மீண்டும் ஒரு வருடம் கழிந்து உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், என் அன்பே, என் கண்ணம்மா. ஒவ்வொரு கணத்தையும் ஒவ்வொரு நொடியையும் நாம் சிறப்பாக வாழ்வோம். உன்னை நான் எப்போதும் காதலிக்கிறேன், நம் காதல் வலுவாகவும் உயர்ந்ததாகவும் இருக்கும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்பிரசன்னாவின் ‘ரொமான்ஸ்’ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.