
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் 41வது பிறந்த நாளில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்திற்கு ‘தேவாரா’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கடலுக்கு நடுவே பாறையில், ரத்தம் சொட்ட சொட்ட கத்தியை கையில் ஏந்தியபடி ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார்.
அவருக்கு அருகில் படகில் கிடக்கும் சடலங்களின் குவியலும் காணப்படுகிறது இந்த போஸ்டரே எல்லோருக்கும் ஒரு வித பயத்தையும் மிரட்சியையும் உண்டாக்கும் வகையில் உள்ளது.
.. மேலும், இப்படம் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் வரும் 2024 ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது