துணிவு படத்தை தொடர்ந்து,நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் யார் என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.’இப்படம் குறித்து கடந்த மே 1 ம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்றும், 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின .
இப்படத்தின் படபிடிப்பு வரும் மே 22 -ம் தொடங்க இருந்த நிலையில், இப்பட நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக லைகா சம்பந்தப்பட்ட அத்தனை பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு சற்று தள்ளிப்போகலாம் என்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித்தை தனது உலக பைக் டூரையே தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது