மலையாளத்தில் வெளியான “அஞ்சம் பாதிரா”, “கும்பளங்கி நைட்ஸ்,” மற்றும் “மஹேஷின்டே பிரதிகாரம்” போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் சைஜு ஸ்ரீதரன், தற்போது ‘புட்டேஜ்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்
இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர்.
ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து, கூட்டு முயற்சியாக இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷினோஸ் பணியாற்றுகிறார்.
சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.இப்படம் ஃபவுண்ட் புட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த முயற்சியானது, திரைப்படத்துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும். இந்த திட்டத்தினை சந்தீப் நாராயண் வடிவமைக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் பாடல்களை வழங்க, சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.
இப் படத்தின் படப்பிடிப்பை திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில் நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார்.