ராம் எண்டர்டெயினர் சார்பில் பிரகாஷ் எஸ்.வி. தமிழ். மலையாளம் என இரு மொழிகளில் தயாரித்துள்ள புதிய படம்,’டெக்ஸ்டர்’.இப்படத்தில்,
இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள சூரியன்.ஜி கூறுகையில்,”தன் காதலி யாமினியை யாரேனும் கேலியாகவோ கிண்டலாகவோ அல்லது அவள் கண்கள் கலங்கும் படி நடந்து கொண்டால் எவனாக இருந்தாலும் அது எமனாக இருந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்பவன் யாமினியின் காதலன் ஆதி..
தன் மீது தன்மீது பாசமாக இருக்கும் ஆதியை கண்டு பெருமை பட்டாலும் இன்னொரு பக்கம் தன்னால் இவனுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று புரிய வைத்து உடனே நாம் திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்ற முடிவுடன் இருக்கும் போது திடீரென்று ஒரு நாள்,யாரோ ஒருவன் யாமினியை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து விட்டு அந்த தகவலையும் ஆதிக்கு சொல்கிறான்.
பதறியபடி ஓடி சென்று பார்க்க கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் யாமினியின் உடலை கண்டு பித்து பிடித்தவர் போல கதறி அழுகிறான் ஆதி. யாமினியை கொலை செய்தவன் யாரென்று தெரியாமல் கண்டுபிடிக்க முடியாமல் மரண வேதனை அடைகிறான். யாமினியின் நினைவால் குடி பழக்கத்திற்கு அடிமையாகி சுயநினைவு இழந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் அவனது நண்பன் டாக்டர்.சத்யா அவனை காப்பாற்றுகிறார்.
மன உளைச்சலில் இருக்கும் ஆதிக்கு யாமினியின் காதலி ஞாபகம் வந்ததா? இல்லையா ? யாமினியை கொலை செய்தவன் யார்..?
அந்த கொலையாளி யாமினியின் எதிரியா.? அல்லது ஆதியின் எதிரியா ? என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்லியிருக்கிறேன்.இதன் படப்பிடிப்பு குடகு மலை , கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடந்து முடிவடைந்தது.
நிறைவு கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.என்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவை ஆதித்ய கோவிந்தராஜ் கவனிக்க,ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ளார்.