60 வயதில் வில்லன் நடிகருக்கு நடந்த 2 வது திருமணம்!

தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தொடர்ந்து ரஜினி நடித்த பாபா விஜயுடன் ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தார்.மேலும் பிற மொழி படங்களிலும் பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் 60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.ரூபாலி கௌஹாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.திரையுலகினர் பலரும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

ஆஷிஷ் வித்யார்த்திக்கு ஏற்கனவே பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவுடன் திருமணம் நடந்துள்ளது  இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது .